முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம் (Photos)
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர நிக்கசீல (47) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ்(28) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெகோ ரக மோட்டார் வண்டி மற்றும் நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தில் மோதி குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்ன நாயக தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது








ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
