இலங்கைக்கு வருகை தரும் போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர்!
போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி(Radosław Sikorski) இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை 2025 மே 28 முதல் 31, 2025 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
விஜயம்
ஐரோப்பிய ஒன்றிய சபையின், போலந்து தலைமைத்துவத்தின் பின்னணியில் இந்த விஜயம் நிகழ்கிறது.
இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையகத்தின் துணைத் தலைவருமான காஜா கல்லாஸை பிரதிநிதித்துவப்படுத்தி, வெளியுறவு அமைச்சர் சிகோர்ஸ்கி இலங்கைக்கு வருகை தருகிறார் என்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீண்டகால ஒத்துழைப்பு
இந்த விஜயத்தின் போது, போலந்து வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன், அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலந்து வெளியுறவு அமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இலங்கைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
