3ஆம் உலக போரை ஏற்படுத்தும் போலந்தின் நடவடிக்கைகள் : ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் போலந்து நாட்டின் இராணுவ கட்டமைப்புகள் அமைவதும் மற்றும் போலந்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேரடியான போரை ஏற்படுத்த கூடும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3ஆம் உலக போர்
நேட்டோவிடம் இருந்து போலந்து ஆதரவை கோரினால், 3ஆம் உலக போர் ஏற்பட கூடும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும்,போலந்தின் தீங்கு ஏற்படுத்தும் நோக்கங்களில் இருந்து வளர கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க, முறையான பதிலடியை தருவதற்கு ரஷ்யாவின் கூட்டணி நாடுகள் தயாராக உள்ளன. ஒட்டுமொத்த உலகுக்கும் பெரிய ஆபத்துக்கான விளைவுகள் ஏற்பட கூடும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி ரஷ்ய அதிபர் புதின் பேசிய நிலையில், மெத்வதேவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
கடந்த அக்டோபர் 5ஆம் திகதி புதின் பேசும்போது, அணு ஆயுத சோதனைகளை தொடங்கும்படி எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் உண்மையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பது பற்றி கூற நான் தயாராக இல்லை என குறிப்பிட்டார்.

தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்......! காசா வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்: ஹமாஸ் அமைப்பினர் சூளுரை (Video)

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 18 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
