யானையை கொன்று தந்தங்களை வெட்டி எடுத்து சென்ற விஷமிகள்!பொலிஸார் தீவிர விசாரணை
யால வனவிலங்கு திணைக்களத்துக்கு உரித்தான வள்ளிமாதாகம பிரதேசத்தில், விஷமிகள் சிலர் யானை ஒன்றை கொன்று அதனது தந்தங்கள் இரண்டு மற்றும் வால் பகுதியை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த யானை இன்று அதிகாலை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
யானையின் தும்பிக்கைப் பகுதி வெட்டப்பட்டு தந்தங்கள் இரண்டும் எடுக்கப்பட்டுள்ளன என்றும், அதேபோன்று யானையின் வால் பகுதியும் வெட்டப்பட்டுள்ளது என்றும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கமைய கொல்லப்பட்ட யானையின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
யானை கொல்லப்பட்டமை தொடர்பில் கதிர்காமம் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
