பல மாதங்களாக மூடப்பட்டுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகம்.. கடும் சிரமத்தில் நோயாளர்கள்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள உணவகம் 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளமையால் நோயாலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவகம் அதிகதொகைக்கு வாடகைக்கு விடப்படுவதாலேயே யாரும் அதனை பெற்று நடாத்துவதற்கு முன்வருவதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிக விலையில் வாடகை
கடந்த வருடம் ரூபாய் 125000க்கு மாதாந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்திற்கும் அதே விலை கோரப்பட்டும் யாரும் பெற்றுக் கொள்ளாத நிலையில் மீண்டும் ரூபாய் 80000க்கு ஏலம் விடப்பட்டும் எவரும் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பலராலும் சட்டிக் காட்டப்படிருந்த நிலையில் உடனடியாக அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரால் பணிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை புதிய கட்டிட தொகுதிக்கு மாற்றப்பட்டமையால் வைத்தியசாலை உணவகத்திற்கும் நோயாளர் விடுதிக்கும் இடைவெளி அதிகமாக காணப்படுவதாலும் நோயாளர்கள், அவர்களை பராமரிப்பவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam