நாமல் ராஜபக்சவிற்கு எதிரான கைது ஆதாரங்கள் - பெரும் குழப்பத்தில் மொட்டுக்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்துள்ளார்.
மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்சவின் கைது ஆதாரங்கள்
நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக தற்போதைய அரசாங்கம் ஊழல் ஒழிப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளில் முன்வைக்கப்பட்ட சான்றுகளை நம்ப முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25