மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயார்: வெளியான அறிவிப்பு
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும் என மவ்பிம ஜனதா கட்சியின் ( Mawbima Janatha Party) தலைவர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்த தேர்தல் நடத்த வேண்டுமென அமெரிக்க பிரஜையான பசில் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற கட்சி மாவட்ட மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்
மேலும் பொதுஜன பெரமுன கட்சி, பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) கட்சி அல்ல, நாமல் ராஜபக்சவின் கட்சி அல்ல.
அது நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களின் கட்சியாகும். மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும்.
மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ( Prasanna Ranatunga) கூறியுள்ளார்.
நாட்டை நேசிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |