வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படவுள்ள பிரபல பாதாள உலகக் குழு தலைவர்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி லெசி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட பொடி லெசிவை நேற்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வர முன்னதாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பின்னர் சட்டப் பிரச்சினைகளினால் நேற்றைய தினம் அழைத்து வரப்படப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பி சென்றவர்..
பொடி லெசி என்பவரை அழைத்து வரும் நோக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்தியா சென்றுள்ளனர்.

தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மனித படுகொலைகள், கப்பம் கோரல்கள், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குறித்த பாதாள உலகக் குழு உறுப்பினர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொடி லெஸி என்பவர் பிணை கிடைத்த நாளிலேயே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக விசாரணகைளின் மூலம் தெரியவந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri