பெங்கால் புயலுக்கு பின்னரான பாதிப்புக்கள்: ஐங்கரநேசன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Sri Lanka Politician Sri Lankan Peoples Weather
By Kajinthan Dec 01, 2024 02:11 PM GMT
Report

பெங்கால் புயல்மழை, கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் பெருக்கெடுத்த வெள்ள நீரால், பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

பெங்கால் புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "பெங்கால் புயல் 2008 நவம்பரில் தாக்கிய நிசா புயலைவிட வீரியம் குறைவானது. ஆயினும், நிசாவைவிட மிக மோசமான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அதன் வருடாந்தச் சராசரி மழைவீழ்ச்சியான 1240 மில்லிமீற்றர் மழையை ஒக்டோபர் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே பெற்றிருந்த நிலையிலேயே பெங்கால் புயல் 720 மில்லிமீற்றர் மழையை மேலதிகமாகக் கொண்டு வந்து கொட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்தநாள்! கொண்டாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்தநாள்! கொண்டாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

நோய்க்காவு அபாயம் 

ஏற்கனவே நிலம் அதன் நீர்க்கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் இம்மேலதிக மழைநீர் போக்கிடமின்றி வெள்ளக்காடாக உருவெடுத்ததில் நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.

பெங்கால் புயலுக்கு பின்னரான பாதிப்புக்கள்: ஐங்கரநேசன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Po Iyngaraneshan Reported About Pengal Storm

வெள்ள நிவாரணப் பணிகளில் நான் ஈடுபட்டிருந்த போது பல்வேறு பகுதிகளிலுமுள்ள கிணறுகளில் மலக்குழிக் கழிவுநீர் கலக்கும் அபாயம் என்னால் உணரப்பட்டுள்ளது.

கிணறுகளில் குளோரின் இட்டுத்தொற்று நீக்குவதும், கிணற்று நீரை இறைப்பதும் அவசியமானவை. எனினும் இவை மாத்திரமே பாதுகாப்புக்குப் போதுமானவையல்ல.

வெடிப்புகளையும் துளைகளையும் கொண்ட மயோசின் சுண்ணாம்புப் பாறைகளினூடாக கிணற்றுக்குள் கசியும் நிலத்தடி நீர் இன்னும் சில வாரங்களுக்கேனும் கிருமிகளைக் காவிவரும் அபாயம் உள்ளதால் கொதித்து ஆறிய நீரே முழுப்பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆகும்.

பெங்கால் புயலுக்கு பின்னரான பாதிப்புக்கள்: ஐங்கரநேசன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Po Iyngaraneshan Reported About Pengal Storm

வெள்ளச்சேதம் அதிகமானதற்கு வெள்ளநீர் உடனடியாவே கடலைச் சென்றடையக்கூடிய கட்டுமான வசதிகள் எம்மிடம் போதாமையும் ஒரு காரணமாகும் இருக்கின்ற வெள்ள வாய்க்கால்களும் எம்மால் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

பூமி சூடாகுவதன் விளைவாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் வருங்காலத்தில் இன்னும் மோசமான வீரியம் மிக்க புயல்களை உருவாக்குமென ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இப்போதே நாம் விழித்துக்கொண்டு முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இயற்கை ஏற்படுத்தப்போகும் பேரனர்த்தங்களில் இருந்து நாம் ஒருபோதும் தப்பமுடியாது” என்றும் தெரிவித்துள்ளார். 

கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்

கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US