ஜனாதிபதியின் உரைக்காக காத்திருந்த நாமல், சாமர சம்பத் - இரவு வேளையில் மீண்டும் சிறை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி வரை இடம்பெற்ற வரவு செலவு திட்ட உரை நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சென்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஆகிய இருவரும் கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு சென்றுள்ளனர்.
இரவு வரை காத்திருந்த நாமல்
இருவரும் இந்த உரையை முழுமையாக கேட்டதன் பின்னரே வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, வரவு செலவுத்திட்டத்தில் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதனைப் பெற்றுக்கொள்ள ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, எதிர்பார்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. சூடான பலகாரத்துக்கு பதிலாக பழுதடைந்த பலகாரமே வழங்கப்பட்டுள்ளதாக சாமர சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.