விசேட அறிவிப்பினை அடுத்து பதவி விலகுகிறார் மகிந்த! அரச தரப்பில் இருந்து வெளியான தகவல்
விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளார்.
பிரதமர் தரப்பில் இருந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த இன்று பதவி விலகாவிட்டால் அமைச்சு பதவிகளை கைவிட தயாராகும் நான்கு பேர் |
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதன் பாதிப்பு இலங்கை அரசியலில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தநிலையில் முழு அரசாங்கமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் போராட்ட வடிவங்களை மாற்றி அரசாங்கத்திற் எதிரான அழுத்தங்களை அதிகரிக்கின்றனர்.
இந்த நிலையில் கொழும்பு அரசியல் எப்போதும் ஒரு பதற்றமான நிலையிலேயே காணப்படுகின்றது.
அரச வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு அவசர அறிவித்தல்! இன்று மட்டுமே வாய்ப்பு |
சொல்லப் போனால் தினம் ஒரு பதவி, தினம் ஒரு பதவி விலகல், சர்ச்சைகள் என தென்னிந்திய அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கட்சிக்குள்ளும், வெளியிலும் கடும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. அத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு பணிப்புரை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஜனாதிபதி தன்னிடம் அவ்வாறு கூறவில்லை எனவும் தான் பதவி விலகப் போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இறுதி தீர்மானம் எடுக்க தயாராகும் மகிந்த! அலரி மாளிகை பகுதியில் நூற்றுக்கணக்கானோர் - உள்நுழைந்த பலர் (Photos) |
எனினும் அதிகரிக்கும் சிக்கல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. அத்துடன் இன்றைய தினம் அவர் பதவி விலகல் தொடர்பான தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.