இலங்கைக்கு அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்த ஜோ பைடன் - நன்றி கூறிய ரணில்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தார். இத்தருணத்தில் இலங்கைக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ முன்வந்த அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஸ்ரீவிசேட அறிக்கையொன்றை வெளியிட்டார். இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவ பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை
"அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் உலகின் பல நாடுகளுடன் கலந்துரையாடலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு வழிகாட்டுவதற்காக தெரிவு செய்யப்பட்ட Lazard & Clifford Chance இன் பிரதிநிதிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.