பதவி விலகுமாறு தினேஸிற்கு அழுத்தம்..! வெளியாகியுள்ள தகவல்
பிரதமர் தினேஸ் குணவர்தனவை அந்த பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயர் அரசியல் தரப்பிலிருந்து இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து இவ்வாறு தற்போதைய பிரதமருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்தவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினேஸ் தரப்பு தகவல் வெளியாகவில்லை
இந்த கோரிக்கை தொடர்பில் தினேஸ் குணவர்தன தரப்பில் எவ்வாறான பதில் அளிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் தரப்பிலிருந்தும் பிரதமரிடம் இவ்வாறு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
எனினும் இந்த தகவல்களை பிரதமர் தினேஸ் குணவர்தன தரப்பும், மகிந்த தரப்பும் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
