யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த பிரதமர்
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி கலந்துரையாடினார்.
இன்றைய தினம் (3) கிளிநொச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் பிரதமர் விஜயம் மேற்கொண்டார்.
முக்கிய விடயங்கள்
அதன்பின் பிரதமர் வளாகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துறைசார் நிறுவனர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக கலந்து உரையாடினார்.
அதை தொடர்ந்து அதற்கான தீர்வுகள் பற்றியும் கூறி அதனை உடனடியாக செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா




