தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான விமர்சனங்களுக்கு விளக்கமளிப்பு
சுவீடனின் ABBA இசை நிகழ்ச்சியில் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பங்கேற்றமையை விமர்சிக்கும் சமூக ஊடக அறிக்கைகளுக்கு, மவுன்ட் லவீனியா ஹோட்டல் நிர்வாகம், விளக்கமளித்துள்ளது.
இதன்படி, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வா ஆகியோர் குறித்த நிகழ்ச்சிக்கு, விருந்தினர்களாகவே அழைக்கப்பட்டனர் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வா ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோரின் பணத்தை செலவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
நிகழ்வில் பங்கேற்பு
எனினும், சுற்றுலா தொடர்பான நிகழ்வு என்ற அடிப்படையில், தொழில்துறைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்ததாக மவுன்ட் லவீனியா ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு இலங்கையின் ஈர்ப்பை மேம்படுத்துவதற்கும், தமது நோக்கத்தின் ஒரு பகுதியாக ABBA நிகழ்ச்சியை நடத்துவதில், தமது நிர்வாகம் பெருமிதம் கொள்வதாகவும் மவுன்ட் லவீனியா ஹோட்டல் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மவுன்ட் லேவினியா ஹோட்டலில் ABBA பொப் இசைக்குழு, ARRIVAL from Sweden நிகழ்வை நடத்தியது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ABBA. இந்த நிகழ்வின்போது, சுவீடனின் பாடல்களை அரங்கேற்றியது.
பிரதம மந்திரி ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
