தெமட்டக்கொட பிரசாரத்தின்போது கூடுதல் பாதுகாப்பு குறித்து பிரதமரின் விளக்கம்
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) கொழும்பு- தெமட்டக்கொட பகுதி அரசியல் பேரணியின் போது, கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எனினும், கடந்த கால அரசியல்வாதிகளின் செயல்களால் அந்தப் பகுதி பாதுகாப்பற்றதாக மாறியுள்ளமை காரணமாகவே, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டது என்று அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்ற எண்ணம் சிக்கலானது என்று பிரதமர் அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் பாதுகாப்பு
இது மக்களின் தவறு அல்ல. கடந்த காலத்தில் நாட்டில் குற்றச் செயல்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனால் தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக நடமாட முடிந்தது.
இருப்பினும்,இந்த அரசியல் பாதுகாப்பு தொடர அரசாங்கம் அனுமதிக்காது. சட்டம் அனைவருக்கும் சமமாகும் என்று பிரதம மந்திரி குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை மீறுபவர்கள் அதே விளைவுகளை சந்திப்பார்கள் என்றும், அரசாங்கத்தின் கவனம் சிறிய அளவைக்கொண்ட மக்களைத் துரத்துவது அல்ல என்றும் பிரதமர் அமரசூரிய கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
