மாணவர்களின் பாடசாலை வருகை தொடர்பில் கள ஆய்வு: பிரதமர் கோரிக்கை
உயர்தரக் கல்வியைத் தொடரும் மாணவ, மாணவிகள் மத்தியில், பாடசாலைக்கு வருகையின்மை போக்கு அதிகரித்து வருவது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
மகரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு விஜயம் செய்தபோது, குறிப்பாக மாணவர்களிடையே வகுப்பறை வருகையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வீழ்ச்சி குறித்து பிரதமர் தமது கவனத்தை செலுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரத் தடை
மேலும், சமூக அல்லது பொருளாதாரத் தடைகள் இல்லாமல், ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
தடுக்கக்கூடிய காரணிகளால் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தவறவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அனைத்து பிள்ளைகளுக்கும்; 13 ஆண்டுகள் பாடசாலை கல்வியை முடிக்கும் வகையிலும் உயர்கல்வியை பெறவும் ஏற்ற கல்விச் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் ஹரிணி அமரசூரிய எடுத்துரைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
