இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் விபத்து: குடும்பஸ்தர் பலி
இரத்தினபுரியில் உழவு இயந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இரத்தினபுரி, குட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல நோனாகம வீதியின் பாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 45 வயதுடைய பெரலனாதர பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்தவராவார்.
குட்டிகல பொலிஸார்
நோனாகம நோக்கி ஆட்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அதே திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து பதலங்கல சந்திரிகாவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய சடலம் பதலங்கல சந்திரிகாவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |