பல்லேகம தேரர் விவகாரம் குறித்து வாய் திறந்த நாமல்!
பல்லேகம ஹேமரத்ன தேரர் வாழுகின்ற விகாரையில் உள்ள அறைக்கு வெளியேயும், உள்ளேயும் சிசிரிவி கமராக்களைப் பொருத்த வேண்டும் என தேரர் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெயசிறி மகாபோதி கோவிலின் பாதுகாப்பிற்காக கோவிலைச் சுற்றி பாதுகாப்பு கமராவை இயக்கி வந்த போதிலும் பல்லேகம தேரர் வசித்து வந்த இல்லத்தில் சிசிரிவி கமராக்களைப் பொருத்த தேரர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
அத்தோடு, பௌத்த பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நிதியை பல்லேகம தேரர் பயன்படுத்திய விதம் குறித்தும் கடுமையான பிரச்சினைகள், சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை, இந்த அரசாங்கம் கீழ் புத்தசாசனம், பௌத்த மத தேரர்கள் அனைவருமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது, அவமரியாதைக்கு உட்படுத்தப்படுவது எல்லாமே திட்டமிட்டு இடம்பெற்று வருவதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.