இலங்கை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பல முக்கிய வீரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு பிக் பாஷ் லீக்கில் விளையாடுவதால் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இந்த தொடரை தவிர்த்துள்ளனர்.
15 வீரர்கள் கொண்ட அணி
மேலும் 15 வீரர்கள் கொண்ட அணியில் புதிய விக்கட் காப்பாளர் கவாஜா நஃபாய் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை வரும் பாகிஸ்தான் அணியில், சல்மான் அலி ஆகா (தலைவர்), அப்துல் சமத், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், கவாஜா நஃபாய், முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இதேவேளை தொடர் அட்டவணையின் படி, இரண்டு அணிகளுக்கும் இடையில், முதல் டி20 போட்டி, ஜனவரி 7, ஆம் திகதியும், இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 9 ஆம் திகதியும், மூன்றாவது டி 20 போட்டி ஜனவரி 11 ஆம் திகதியும் தம்புள்ளையில் இடம்பெறுகின்றன.