பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு
பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.
பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
இந்தநிலையில், பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் உள்ளிட்ட இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாடகர் ஸ்ரீனிவாஸ், ஜீவன் சரண்யா ஸ்ரீனிவாஸ், ஈழத்து பாடகி கில்மிசா, அக்சயா ஆகியோரை மருத்துவ பீட மாணவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.








ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan