அரசுக்கெதிராக களத்தில் இறங்கிய பெருந்தோட்ட மக்கள் (Photos)
அரசுக்கெதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களும் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
அந்த வகையில் பொகவந்தலா பெருந்தோட்டப் பகுதியில் இன்றையதினம் காலை தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அரசுக்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
நுவரெலியா
நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இன்று (04) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 300ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு , விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை பொது மக்கள் எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.















யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 20 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
