கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நட்ட ஈடு
கிளிநொச்சி மாவட்டத்தில் 584 விவசாயிகளுக்கு 12,785,473 ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2023, 2024 பெரும்போகத்தில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கே குறித்த நஷ்டஈடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் (பதில்) P.பூரணச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், 2023, 2024 காலப்பகுதியில் 71947 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காப்புறுதி சபையின் நன்மைகள்
எதிர்வரும் சனிக்கிழமை(12.10.2023) விவசாய அமைச்சர் கிளிநொச்சி வருகின்ற போது சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் வைப்பில் இடப்படும்.
கமநல காப்புறுதி சபையின் இவ்வாறான நன்மைகளை விவசாயிகள் அடைவதற்கு அனைத்து விவசாயிகளும்தங்களின் பயிர்களுக்கு காப்புறுதி செய்வதுடன் தமது கால்நடைகளுக்கான காப்புறுதிகளையும் மேற்கொள்ள முடியும்.
விவசாயிகளுக்கான ஓய்வூதிய காப்புறுதியை பெருமளவு விவசாயிகள் பயன்படுத்துவதில்லை எனவும் இவை விவசாயிகளின் இறுதி நேரத்தில் பிரயோசன படுத்தும் எனவே விவசாய ஓய்வூதிய காப்புறுதியையும் விவசாயிகள் செய்ய வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 19 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan