பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கைக்கு எதிராக தீட்டியுள்ள திட்டம்
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டுமெனக் கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48ம் அமர்வுகளின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டு சீனா முன்வைத்த தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவளித்த காரணத்தினால், பிரித்தானியா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, மெசிடோனியா, கனடா, ஜெர்மனி மற்றும் மொன்டினிக்ரோ ஆகிய நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டுமென ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாக தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri