தீயில் கருகிய தமிழர் வரலாறு..! சிங்கள ஆதிக்கத்தின் மற்றுமொரு கோரம் (Video)
இலங்கை தீவில் 30 வருடங்களாக தொடர்ந்து நடந்த யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் என்பது யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.
அதன் வடுக்கள் இன்றளவும் தமிழர் வாழ்வில் மாறாத ஒன்றாக என்றும் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
உலகில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டுக்கு அடையாளமே இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள். அதிலும் யாழ்ப்பாணம் தமிழர்களின் அடையாளம்.
அதற்கு சான்றுதான் யாழ். பொது நூலகம். அதாவது தமிழர்களின் கருவறை என்று கூட சொல்லலாம்.
அப்படிப்பட்ட யாழ். நூலகத்தின் தற்போதைய நிலைதான் என்ன..! யுத்தத்தின் போது யாழ். நூலகம் குறிவைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன...!
திட்டமிட்டு எரிக்கப்பட்ட யாழ்.பொது நூலகம்
ஒரு இனத்தினை அழிக்க வேண்டும் என்றால், அந்த இனத்தின் அடையாளங்களை அழித்தால் போதும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே யாழ். நூலக எரிப்பு.
தமிழர்களின் வரலாற்றில் பொறாமை கொள்ளப்பட்டு - எரிச்சலடைந்த - சினம் கொண்ட சிங்கள பேரினவாதிகளினால் தமிழர்களின் வரலாறு, அடையாளம் என்பன புரட்டிப் போடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில், இலங்கை முழுவதுமான தமிழரின் வரலாறுகளை - சரித்திரங்களை நூல்களாவும் ஆவணங்களாகவும் பொதிந்து வைத்திருந்த யாழ். பொது நூலகத்தில் நடந்தேறிய கொடூரத்தின் உச்சமே இதற்கு சான்று.
ஜுன் கலவரத்தில் காணாமலாக்கப்பட்ட - சாம்பலாக்கப்பட்ட - அழிக்கப்பட்ட ஒரு வரலாற்றின் படிமம் தான் மீண்டும் நினைவூட்டப்படுகிறது.
யாழில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டமையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த நினைவேந்தல் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாண பொது நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவிற்கும், யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொது நூலக பிரதம நூலகர், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
