நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம் : வெளியான அதிர்ச்சிக் காணொளி
அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
விமானத்தின் இடது இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டும் வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தீயணைப்புப் படையினரால்
இருப்பினும், விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Boeing 767 Engine Erupts in Flames After LAX Takeoff, Forcing Delta Flight to Return as Passengers Watch in Horrorpic.twitter.com/vOG3iHUzwL
— TaraBull (@TaraBull808) July 20, 2025
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு விமான நிலைய தீயணைப்புப் படையினரால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




