மும்பை விமான நிலையத்தில் திடீரென இரண்டாக உடைந்து விழுந்த விமானத்தினால் பரபரப்பு
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சிறிய ரக விமானமொன்று ஓடுபாதையில் இருந்து விலகி பாதியாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனமழை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், அதில் பயணம் செய்த எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகளும் சிறிது நேரம் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்துக்கு வந்த 9 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பதிவாகியமை இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியுள்ளதுடன், மீட்பு படையினர் விரைந்து தீயை அணைத்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
