சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
சென்னையிலிருந்து (Chennai) சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று (11) அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் உடனடியாகக் கண்டறிந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு
இந்நிலையில், விமானிகள் உடனடியாக விமான நிலையத்துடன் தொடர்புகொண்டு சென்னை விமான நிலையத்துக்குச் செல்ல முடிவு செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் பயணிகள் உட்பட 170 இருந்த நிலையில், விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொறியியலாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை ஆராய்ந்து வருவதோடு, கோளாறு சீர் செய்யப்பட்டதும் விமானம் மீண்டும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பற்றி விமான நிறுவனம் விவரம் எதுவும் வெளியிடவில்லை. மற்றொரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
