தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி
சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.
விமானத்தில் ஏழு பேர்
சோமாலியாவில் அல் - ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக அமைதி காக்கும் பணியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.
🚨 At least 3 killed in African Union military helicopter crash in Somalia.
— Thomas MORE (@ThomaMore) July 2, 2025
➔ The AU mission supports Somali forces against al-Shabab.
➔ Militants oppose foreign troops in the Horn of Africa nation.
Somalia continues to face security challenges. #Somalia #Africa #BreakingNews pic.twitter.com/jCImh6kfqB
இந்த நிலையில், மொகடிஷு நகரில் உள்ள விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விமானத்தில் ஏழு பேர் இருந்ததாகவும் ஏனையவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |