நேபாளத்தில் பயணிகளின் உயிரை பறித்த பாரிய விமான விபத்து
நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 18 பயணிகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் உள்ள திருபவுன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
Air accident in #Nepal: Saurya Air's #9NAME - 21.4 year old Bombardier CRJ-200 - crashed immediately after takeoff at Tribhuvan Int'l Airport, Kathmandu - reportedly killing 18 of 19 onboard - mostly airlines staff. It was en route to #Pokhara for engine pic.twitter.com/cOIJf800dj pic.twitter.com/de1iR6y7GT
— Shino SJ (@Lonewolf8ier) July 24, 2024
18 பேர் பலி
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக விமான நிலையம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான குறித்த விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |