தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் தொடரப்படவுள்ள வழக்கு
கனடிய தமிழ் காங்கிரஸ் மீது 146,000 மில்லியன் கனடிய டொலர்களுக்கு வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகமையில் 2527 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று (21.01.2024) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய ஒப்பந்தம்
இதன் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கனடிய தமிழ் பேரவைக்கு எதிரான தங்கள் வழக்கில் நீதி கோரி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 146,000 மில்லியன் கனடிய டொலர்கள் தொகையை கோருகின்றனர்.
இந்த சட்ட நடவடிக்கைக்கான காரணம் நேரடியானது. காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் அல்லது 2009 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலையில் இறந்தவர்களின் அன்புக்குரியவர்களின் எந்த அங்கீகாரமும் இன்றி, கனடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், எமது துன்பங்களுக்கு காரணமானவர்களைச் சந்தித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து சர்வதேச விசாரணைகளை புறக்கணிக்க அல்லது தடுப்பதற்காக இந்த போர்க்குற்றவாளிகளுடன் கனடிய தமிழ் காங்கிரஸ் ஒரு முன்னைய ஒப்பந்தத்தை செய்திருந்தது என்பதை இது குறிக்கிறது.
இமாலய பிரகடனம்
இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த, அவற்றை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது முக்கியம். 'இமாயலப் பிரகடனத்தை' உருவாக்கியதன் பின்னணியில் முதன்மையானவர் சுமந்திரன் என்பதை நாங்கள் உறுதியளிக்க முடியும்.
தமக்கும் ரணிலுக்கும் தொடர்பில்லை எனக்கூறி அதற்கான பொறுப்பை அவர் மறுத்தமை மிகவும் ஆச்சரியமளிக்கிறது. இருப்பினும், 'இமாலய பிரகடனத்தில் ' இருவருமே பங்கு வகித்தனர் என்பதே உண்மை.
ஒரு ஊழல் குற்றவாளி, ஒரு கொடுங்கோலன் மற்றும் அடக்குமுறையாளர் என்று பார்க்கப்படுகிறது.
அரசியல் தீர்வு
யுத்தத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த எமது தாய்மார்களும் ஏனைய அன்பானவர்களும் நிகழ்நிலை மூலம் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தயாராக உள்ளனர். கனடா மற்றும் பிற நாடுகளில் உள்ள எட்டப்பர்களை ஒழிக்க ஒவ்வொரு தமிழனும் இந்த வழக்கில் பங்கேற்க வேண்டும்.
கனடிய தமிழ் காங்கிரஸ் தமிழர் பிரச்சினைகளை ஆதரிப்பதாகக் கூறினால், இலங்கைக்கான ஆதரவானவர்கள் அல்லது சிங்கள முகவர்கள் என்று கருதப்படுபவர்கள் பதவி விலகி நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சரியான அரசியல் தீர்வுக்காக உண்மையாக வாதிடும் தமிழர்களை அனுமதிக்க வேண்டும்.
கனடிய தமிழ் காங்கிரஸ் தமிழர்களின் பேச்சு சுதந்திரத்தை அற்பமான வழக்குகளால் அச்சுறுத்தி, இது விமர்சனங்களையும் உண்மை கண்டறியும் முயற்சிகளையும் திசைதிருப்பவும் அடக்கவும் பாவிக்கிறார்கள்.
கனடிய தமிழ் காங்கிரஸ்சின் இந்த நடத்தை சுமந்திரனின் நாடக புத்தகத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சுமந்திரன் கனடாவில் இருந்து, குறிப்பாக கனடிய தமிழ் காங்கிரஸ்சிடமிருந்து பெற்ற பணம் குறித்து தமிழ் எம்.பி.க்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் அவர்களை வழக்குப் போடுவதாக மிரட்டி பதிலளித்தார் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
