பொலிஸ்மா அதிபரால் அரங்கேற்றப்படும் நாடகம் : கடுமையாக சாடும் பொன்சேகா
யுக்திய என்ற பெயரில் பதில் பொலிஸ்மா அதிபரால் நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு செயற்படுவதால் பாதாள உலகக் குழுவினரையும் கட்டுப்படுத்த முடியாது. போதைப்பொருளையும் அழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் அச்சப்படத் தேவையில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்களே காணப்பட வேண்டும். கடந்த காலங்களில் மக்களின் தவறான தீர்மானங்களால் தவறான தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றனர்.

எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்தால், நாம் அவர்களுடன் இருப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளன.
பொதுஜன பெரமுனவால் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே தற்போதைய ஜனாதிபதியாக உள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமடைந்த நிலைமையிலேயே உள்ளது. எனவே இந்த கூட்டணி எமக்கு பாரிய சவாலாக அமையப்போவதில்லை.

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப கட்சி முறையாக செயற்பட்டால் யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் நாம் அச்சப்படத் தேவையில்லை.
எமது நாட்டுக்கென கலாசாரமும் ஒழுக்கமும் காணப்படுகிறது. அவற்றுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும்.
யுக்திய என்ற பெயரில் பதில் பொலிஸ்மா அதிபரால் நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு செயற்படுவதால் பாதாள உலகக் குழுவினரையும் கட்டுப்படுத்த முடியாது. போதைப்பொருளையும் அழிக்க முடியாது என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam