இலங்கையில் அணுமின் நிலையம்: ரஷ்யாவின் திட்டத்தை ஆராயும் சர்வதேச அணுசக்தி நிறுவனம்
இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களைச் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான (IAEA) இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க உதவும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஷ்ய கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

எரிசக்தி பற்றாக்குறை பிரச்சினை
அவரது கூற்றுப்படி, அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பதா அல்லது நிலத்தில் நிர்மாணிப்பதா? என்பது பற்றிய விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது.
அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கான பயிற்சிகளை ரஷ்யாவின் ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான சுழளயவழஅ வழங்கும்.
இந்தநிலையில், இலங்கையில் நிலவும் எரிசக்தி பற்றாக்குறை பிரச்சினையை அணுசக்தியால் மட்டுமே தீர்க்க முடியும் எனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த அணு மின்சார நிலையத்தின் உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவோட்ஸாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan