அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள அரசாங்கம் - வெளியாகியுள்ள தகவல்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் புதிய வரவு செலவுத் திட்ட யோசனையின் ஊடாக நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி திரு.லால்காந்த இதனை தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த வளங்களை விற்பனை செய்வதன் மூலம் நாட்டுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து டொலர்களை ஈட்ட அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.