மத்திய வங்கியின் கட்டுப்பாட்டால் நாட்டுக்கு காத்திருக்கும் அபாயம்! ரணிலுக்கு சென்ற செய்தி
குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களுக்கான மத்திய வங்கியின் கட்டுப்பாடு நாட்டில் உணவு தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் அபாயம் இருக்கின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைலர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
அதனால் மத்திய வங்கியின் கட்டுப்பாடு தொடர்பாக கவனம் செலுத்தி அதனை தளர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணிலுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்

இலங்கை மத்திய வங்கியினால் ஒருசில இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
சிலவகை இறக்குமதிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து வியாபாரிகள் சிலர் எனது கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றார்கள்.
தற்போது நாம் முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இறுக்கமான நாணயக்கொள்கை அவசியமாகும்.
இருப்பினும் திறந்த கணக்கு, பெற்றுக்கொண்டமைக்கான பத்திரம், கட்டணம் செலுத்தியமைக்கான பத்திரம் போன்றவற்றின் மீதான கட்டுப்பாடுகள் எதிர்வரும் சில நாட்களில் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும்.
உணவுப் பொருட்கள் தொடர்பான பிரதமரின் அவதானம்

எனவே மேலே குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், அத்தியாவசியப்பொருளாகக் கருதப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பான தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை அனுமதிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தும்படி மத்திய வங்கியிடம் கேட்டுக்கொள்ளுமாறும் உங்களை வலியுறுத்துகின்றேன்.
இது மிகக்குறுகிய காலத்தில் சந்தையில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும். இந்த விடயம் தொடர்பில் நீங்கள் அவதானம் செலுத்துவது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
You My Like This Video
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri