உலகின் மிகத் துல்லியமான நிகழ் நேரத் தகவல் தளமாக மாறும் டுவிட்டர்
டுவிட்டர் நிறுவனமானது அமெரிக்காவை தலைமையக கொண்டு செயற்படும் ஒரு சமூக ஊடக நிறுவனமாகும்.
உலக பணக்காரரான எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கிய பின்பு டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார்.
இதில் தவறான தகவல்களை கையாள்வதில் அவர் மேற்கொண்ட அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.
துல்லியமான நிகழ்நேர தகவல்
இதனையடுத்து டுவிட்டரின் தலைமை நிர்வாகியாக லிண்டா யாகரினோ நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது லிண்டா யாகரினோ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் டுவிட்டர் 2.0-க்கான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் டுவிட்டரை உலகின் மிக துல்லியமான நிகழ்நேர தகவல் ஆதாரமாக மாற்றும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறி உள்ளார்.
The success of Twitter 2.0 is all of our responsibility.
— Linda Yaccarino (@lindayacc) June 12, 2023
We need to think big.
We need to transform.
We need to do it all together.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |