இளம் வாக்காளர்களை தேர்தலில் ஈடுபடுத்த திட்டம்
வாக்காளர் பதிவு சட்டமூலம் நடைமுறைக்கு வருவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததுடன் அதற்கேற்ப இளைஞர்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த வாரம் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க வாக்காளர் பதிவுச் சட்டத்திற்கு அமைய, முன்னர் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் திகதியில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட தோடு, அதன் பின்னர் பிறந்த தினத்தை கொண்டவர்களுக்கு அதற்கு அடுத்த வருடம் மே 31ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறும் தேர்தலிலேயே வாக்குரிமை கிடைத்தது.
இது தொடர்பில் பல்வேறு இளைஞர் அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தி 2021 பெப்ரவரி மாதம் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.
இதற்கமைய, இந்தச் சட்டமூலம், இந்தச் சூழலைக் கடந்து, அதிக இளைஞர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கும் வகையில், இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதேபாடு, 2021 22ஆம் இலக்க வாக்காளர் பதிவு சட்டம் ஒக்டோபர் 13 திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் இந்நாட்டு இளைஞர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், மேலும் இளைஞர் ஒருவர் 18 வயதில் வாக்களராக பதிவு செய்துகொள்ள, அவரது கிராமத்தைச் சேர்ந்த கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
வாக்காளர் பட்டியலைத் தவிர, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை துணைப் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும், இளைஞர்களின் பெயர்களை முதலில் அதில் சேர்க்க முடியும்.
