அனுராதபுரத்தில் தெரு நாய்களை அகற்றும் திட்டம்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் விலங்கு நல கூட்டணி (AWC), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
2025 ஏப்ரல் 5 அன்று, அவர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, அனுராதபுரத்தில் சுற்றித் திரியும் நாய்களை அகற்றும் திட்டத்தில் தலையிடுமாறு, கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
கால்நடை நிபுணர்கள் மற்றும் விலங்குகள் உரிமைகள் தொடர்புடைய சட்டத்தரணிகள் அடங்கிய குழுவான, குறித்த கூட்டணி, இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள, அதிகாரப்பூர்வ கடிதத்தில், குறித்த நடவடிக்கை குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
CNVR - சிகிச்சை
தென்கிழக்கு ஆசியாவில், பிடிப்பு, கருத்தடை, தடுப்பூசி, விடுதலை என்ற 'CNVR' திட்டங்களில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும், சுற்றித் திரியும் CNVR - சிகிச்சையளிக்கப்பட்ட நாய்களுக்கு இந்தியாவில் பொதுமக்களின் சகிப்புத்தன்மை அதிகமாக உள்ளது என்றும் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மோடியின் விலங்கு நலன் குறித்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அனுராதபுரத்தில் தெருநாய்களை அகற்றுவதற்கு அவரது அலுவலகம் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று, தாம் கருதுவதாக இலங்கையின் விலங்கு நல கூட்டணி குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
