2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க திட்டம்: சுற்றுலாத்துறை அமைச்சர்
இலங்கை சுற்றுலாத்துறையானது 2024ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைத்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் 33 வீதமானோர் மீண்டும் மீண்டும் வருபவர்கள் என்பது சுற்றுலாத்துறைக்கு உத்வேகம் அளிக்கிறது.
இதன்படி, உலகம் முழுவதிலுமிருந்து 100 முதல் 150 முறை வரை இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வந்தவர்களும் உள்ளனர்.
சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி
இலங்கை, சுற்றுலாப்பணிகளுடன் ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது, அதன் விளைவாக, பயணிகளின் வருகை தொடர்ச்சியாக இருக்கின்றது.

2024இன் முதல் சில மாதங்களில், நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.அதிலும் பெப்ரவரி மாதம் மொத்தம் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகையை நாடு பதிவுசெய்துள்ளது.
இதற்கு முன்னர் 2020 ஜனவரியில் 200,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்ததன் பின்னர் இதுவே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையாகும்." என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam