கனடாவில் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகவுள்ள புதிய தடை
கனடாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோ பாடசாலை சபை திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த யோசனைத் திட்டத்தை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் விசேட கல்வித் தேவைகளுக்கு மட்டும் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாதக விளைவுகள்
எனினும் தற்பொழுது அதிகளவில் சமூக ஊடகப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணிகளினால் கையடக்கத்தொலைபேசி பாதக விளைவுகளை ஏற்படுத்துவதோடு இளம் தலைமுறையினரின் உளச்சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசி பயன்பாட்டை மட்டுப்படுத்த அல்லது தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரொறன்ரோ பாடசாலை சபை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |