இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெறுவதற்கு உலக வங்கியுடன் தேவையான உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவையில் நேற்று(05) நடைபெற்ற கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
காப்புறுதித் திட்டம்
இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தின் மற்றும் நிறுவன திறன்களை உயர்த்துவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களின் காப்புறுதி வைப்பாளர்களுக்கு பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தின் இருப்புக்களை அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும்.
முன்னதாக 2023 ஏப்ரல் 24 ஆம் திகதியன்று உலக வங்கி நிதியின் கீழ் நிதித் துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் பின்னரே நவம்பர் 09 ஆம் திகதி, உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை, இலங்கையின் நிதித் துறையின் பின்னடைவை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அங்கீகரித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |