வெடுக்குநாறி பூஜைக்கு எதிராக கிளம்பியுள்ள பௌத்த தேரர்கள்: நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்
புதிய இணைப்பு
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சட்டத்தரணி ஊடாக வவுனியா நீதிமன்றத்திடம் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வவுனியா வடக்கு, ஓலுமடு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொல்பொருட் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் அங்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபய திஸ்ஸ தேரர், சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் உள்ளிட்ட குழுவினர் இராணுவ பாதுகாப்புடன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் லேயத்திற்கு சென்று பார்வையிட்டு இருந்தனர்.
பாதுக்காக அணிதிரள்வோம்
இதற்கமைய எதிர்வரும் 8 ஆம் திகதி சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் குருந்தூர் மலை விகாராதிபதி சமூக வலைத்தளத்தில்

''பௌத்த இடம் நெடுங்கேணியில் ஆக்கிரமிக்கபடவுள்ளது. அதனை பாதுக்காக அணிதிரள்வோம்'' என பதிவு செய்துள்ளார்.
ஆனால், ஆலய நிர்வாகத்தினர் வழமை போன்று சிவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், வெளிச்சத்திற்காக மின்பிறப்பாக்கி பயன்படுத்துவதாக இருந்தால் நீதிமன்றில் அனுமதியைப் பெறுமாறு நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில் ஆலய நிர்வாகத்தினர் மின்பிறப்பாக்கி பயன்படுத்த அனுமதி கோரி சட்டத்தரணி ஊடாக கடந்த வியாழக் கிழமை மன்றின் கனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
மேலும், இது தொடர்பில் ஆராய்ந்து, எதிர்வரும் திங்கள் கிழமை முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி - திலீபன்
முதலாம் இணைப்பு
வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்
எதிர்வரும் 8ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள்
ஈடுபடவுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்குமார்களை இணைந்து செயற்படவுள்ளதாக
அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தி.தவபாலன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டதில் நேற்று (01.03.2024 ) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் தீர்வு
மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்களில் குருந்தூர் மலையாக இருக்கலாம் வெடுக்குநாறி மலையாக இருக்கலாம் எந்த விடயங்களாக இருந்தாலும் தமிழர் தேசத்தில் நாங்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

சிங்கள பௌத்த மனநிலை உள்ள தலைவர்கள் தமிழர்களின் தீர்வினை தாம்பாளத்தில் வைத்து தரமாட்டார்கள் என்று எங்கள் தலைவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
இந்நிலையில், அதை காலம் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. எவராக இருந்தாலும் தமிழர்களின் தீர்வினை தருகின்ற மனநிலையில் இல்லை” என்றும் தவபாலன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan