இலங்கை அரசாங்கத்தை கொண்டு நடத்தப் பணம் இல்லையாம்! இப்படி கூறுகிறார் அமைச்சர்
அரசாங்கத்தை கொண்டு நடாத்த போதியளவு பணமில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதிலும் அரசாங்க திறைசேரிக்கு மூன்று ட்ரில்லியன் ரூபா பணம் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவற்றில் இரண்டு ட்ரில்லியன் ரூபா அரசாங்க கடன் செலுத்துகைகளுக்காக செலவிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன்களுக்கு வட்டி
நாட்டுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்காக வட்டியாக இரண்டு ட்ரில்லியன் ரூபா செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே செலவுகளை மேற்கொள்வதற்கு கடன் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகைகளை உடன்படிக்கை அடிப்படையில் செலுத்த தவறினால் நாட்டை நடத்திச் செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.