மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் (Photos)
13 முதல் 17 வயது வரையான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் பணி நோர்வூட் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நோர்வூட் பிரதேசத்திலுள்ள முதலாம் கட்ட கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி இன்று (29) வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 4 பாடசாலைகளை சேர்ந்த மேற்படி மாணவர்களுக்கு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்து காலை 9 மணி முதல் 11 மணிவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கோவிட்
நாட்டில் தற்போது கொவிட்டின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை சிறந்த செயலாக காணப்படுவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு |







