பியூமி ஹன்சமாலியின் மகன் உள்ளிட்ட 8 பேர் கைது - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை மாடல் அழகியான பியூமி ஹன்சமாலியின் மகன் உட்பட ஏழு சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கூடுதல் நீதவான் நுவான் கௌசல்யா நேற்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ராஜகிரிய, அம்பகஹண்டிய பகுதியில் உள்ள ஒரு வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் இளைஞர் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக பியூமி ஹன்சமாலியின் மகன் உட்பட ஏழு சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட நபர்
சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போதிலும், அணிவகுப்பை ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சாட்சி சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையின் அடிப்படையில், சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, ராஜகிரிய பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதால் விபத்து ஏற்பட்டது. மேலும் விபத்துக்குப் பிறகு வந்த சந்தேக நபர்கள் குழு முச்சக்கர வண்டியின் சாரதியைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri