CIDஇல் முன்னிலையான பியூமி ஹன்சமாலி
பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு இன்று காலை வருகை தந்த பியூமி ஹன்சமாலி நீண்ட நேரத்தின் பின்னர் வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
மில்லியன் கணக்கான சொத்துகள்
தனது தனிப்பட்ட காரணத்திற்கான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கே பல நேரம் எடுத்ததாகவும்,தனக்கெதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று செய்த முறைப்பாடு தொடர்பில் எதிகாலத்தில் விரிவான விபரங்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக விசாரணைகள் நடைபெறுகின்றன.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரியை அவர் செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




