கோவிட் சடலங்களை புதைக்க இரணைதீவில் தோண்டப்பட்ட குழிகள்! பொது மக்கள் எடுத்த நடவடிக்கை
கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இரணைதீவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்காக கடற்படை தோண்டிய குழிகளை சில உள்ளூர்வாசிகள் மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட் - 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான முயற்சிகளை தமிழ் அரசியல்வாதிகளும் ஆட்சேபித்துள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் உள்ள இரணைதீவு இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது,
கோவிட் - 19 சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவில் ஒரு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவால் இந்த பகுதி முன்மொழியப்பட்டது.
இரணைதீவில் கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், இது தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றார்.
அனைத்து ஆரம்ப நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், எந்த நேரத்திலும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவில் உள்ள நிலம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
