முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் பரிதாப நிலை
இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சமகால அரசாங்கத்தின் கீழ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகி உள்ளார்.
மேலதிக வைத்திய நடவடிக்கைக்காக இன்று அதிகாலை 1.30 மணியளவில் உறவினர் என தெரிவிக்கப்படும் பெண்ணுடன் அவர் சென்றுள்ளார்.
ஷிரந்தியின் பரிதாப நிலை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் செல்லும் பாதை ஊடாக பயணித்த ஷிரந்தி, தனது உடமைகளை தானே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆட்சிக்காலத்தின் தீவிர பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ வலம் வந்த ஷிரந்தியின் இன்றைய நிலை பரிதாபமாக மாறியுள்ளது.
அதிகாரம் மற்றும் நிதி துஷ்பிரயோகங்களில் சிக்கியுள்ள ராஜபக்ச குடும்பம், தற்போது பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் குடும்பமாக சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ச இன்றையதினம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்