இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் கியூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கூட்டாக நேற்று (3) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள கடற்கரை ஓரம் உள்ள தோப்பு ஒன்றில் சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 20,400 வலி நிவாரணி மாத்திரைகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 4800 வயாகரா மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள், சோப்பு, உள்ளிட்டவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தீவிரமாக விசாரணை
அத்துடன் அங்கு இருந்த படகு இரண்டு எஞ்சின்கள் கைப்பற்றிய கியூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் எனவும் இதன் சர்வதேச மதிப்பு 17 லட்சம் இருக்கும் என ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடத்தல் சம்பவம்
மேலும் கடற்கரை ஓரம் நடைபெறும் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் தகவல் அளிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் ஊடாக தமிழகத்தில் இருந்து கடல் அட்டை, கஞ்சா போதை பொருள், அழகு சாதன பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள், சமையல் மஞ்சள், முந்திரி, ஏலக்காய், சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது.
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam