அறுசுவை உணவுக்காக நாடாளுமன்றம் செல்லும் தமிழ் எம்.பிக்கள் : பிள்ளையான் காட்டம்
அறுசுவை உணவுக்காகவே தமிழ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றார்கள் என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (Pillayan) தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக களுவாஞ்சிகுடியில் மூடப்பட்டு கிடந்த பழைய
நீதிமன்ற வீதி புனரமைப்பு வேலைகளை நேற்று (25.06.2024) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நான் சிறிய வயதில் களுவாஞ்சிக்குடிப் பகுதிக்கு வந்ததில்லை காரணம் நான் 1991ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து விட்டேன்.
இயக்கத்திலிருந்த போது களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கரிகாலன், சுரேஸ், கண்ணன், ரகு, ஆகியோரோடு தான் செயற்பட்டேன். அவர்கள் இப்பகுதியைப் பற்றி எனக்கு தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், தான் நாம் இன்னமும் வீதிகள் இல்லாமல், ஒரு அடக்குமுறைக்குள் இருந்து வந்திருக்கின்றோம் என்பதை உணரமுடிகின்றது. எமது மண் மெல்ல மெல்ல உயர்ந்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |